ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான மக்கள் போராட்டம்-

கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் வன்முறை தொடர்கிறது- இதுவரை எழுவர் பலி, 220 பேர் காயம்

தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்துக்கும் அழைப்பு
பதிப்பு: 2022 மே 10 11:09
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 11 23:05
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் இதுவரை அரசியல்வாதிகள் உட்பட ஏழுபேர் கொல்லப்பட்டும் மேலும் இருநூற்று இருபது பேர் காயமடைந்தும் உள்ளனர். ஆனால், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தொடர்பாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இதுவரை சுமார் முப்பத்தைந்து அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களுடைய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
 
இதேவேளை, தீவின் தெற்கில் உள்ள அம்பாந்தோட்டைக்கு அண்மித்த இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமாரவின் இல்லத்தின் மீது திங்கட்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சரத் குமார திங்கள் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

திங்கள் இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற கலகத்தின்போது கண்ணீர்ப் புகைக்குண்டு வெடித்ததில் 24 வயதுடைய பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் மாரடைப்பினால் ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள் குவிக்கக்பட்டுள்ளனர்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச பதவி வலிகும் வரை தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட வேண்டுமென ஆசியர் சங்கங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.