பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு விவகாரங்கள்

ரணில் பிரதமராகப் பதவியேற்ற பின்னரும் தொடரும் போராட்டங்கள்

கடமையை உடனடியாக ஆரம்பித்தார்
பதிப்பு: 2022 மே 12 12:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 15 23:16
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்தபோதும், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் கொழும்பில் தொடருகின்றன. இன்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்தபோது, கொழும்பு கொள்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்ல ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்குப் போக வேண்டும் என்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பிரதமரகப் பதவியேற்க முடியுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்பினர்.
 
காலிமுகத் திடலில் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது கூச்சல் குழப்பம் விளைவித்ததுடன், ரணில் விக்கிரமசிங்க வெளியேற வேண்டும் என்றும் கோசம் எழுப்பினர்.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமராகப் பதவிப பிரமாணம் செய்த ரணில் விக்கிரமங்ச கொழும்பில் உள்ள பௌத்த, சைவ ஆலயங்களுக்கும் மற்றும் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபட்டார்.

நாளை வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பதவிகளைப் பெற்றிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட மலையகத் தமிழ், முஸ்லிம்கள் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்குமெனக் கூறப்படுகின்றது.