காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில்

மகிந்தவுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது

மேலும் ஒன்பது உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகச் சபாநாயகருக்கு அறிவிப்பு
பதிப்பு: 2022 மே 17 22:10
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 17 23:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் முன்னாள் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீண்டகாலமாக அமைச்சர்களாகவும் பதவி வகித்திருந்தனர். காலி முகத் திடலில் தொடர்ச்சியாக இடம்பெறும் போராட்டத்தில் பங்குகொண்டிருந்த இளைஞர்களைத் திட்டமிட்டுத் தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த ஒன்பதாம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவுக்கு அறிவித்துள்ளனர். மிலான் ஜயதிலக, சனத் நிஷாந்த ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

படங்கள், வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யபட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு தெட்டக்கொட பிரதேசத்தில் உள்ள குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் இவர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தனர்.