கோட்டாவுக்கு எதிரான போராட்டம் இடம்பெறும் காலிமுகத் திடலில்

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முதன் முதலாக தென்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு என இளைஞர்கள் கூறுகின்றனர்
பதிப்பு: 2022 மே 18 11:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 19 10:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
முதன் முறையாக இந்த ஆண்டு கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதிவியில் இருந்து விலகுமாறு கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாகக் கொழும்பு காலிமுகத்திடலில் போராடி வரும் இளைஞர்கள், இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர். சிங்கள இளைஞர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பினரும் நிகழ்வில் பங்குகொண்டனர். காலிமுகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
 
இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு இருக்கும் உரிமையை அரசாங்கம் மறுத்து வந்ததென்றும், ஆனாலும் இம்முறை கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு போ என்று கூறும் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் ஒன்றுகூடி முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதாகவும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

காலிமுகத் திடல் மைதானத்தில் நினைவுத்தூபி ஒன்று செய்யப்பட்டு அதற்கு மாலை அணிவித்துத் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. அங்குகூடியிருந்த அனைவரும் அதற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

வடக்குக் கிழக்கில் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இடம்பெற்று வரும் நினைவேந்தல் நிகழ்வு, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கூட்டாக வலியுறுத்தும் வகையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.