இலங்கை ஒற்றையாட்சி அரசின்

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 21 ஆவது திருத்தச் சட்டம்- அரசுக்குள் குழப்பம்

இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தில் சர்ச்சை
பதிப்பு: 2022 மே 26 09:10
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 27 09:33
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பது தொடர்பான 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக்கூடிய வாய்ப்புகள் இல்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. திருத்தச் சட்டத்துக்கான நகல்வரைபு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடாமல் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் அதிருப்திகள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 
அதேவேளை. 21 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச முற்படுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி உறுப்பினர்களோடு தொலைபேசிகள் மூலமாக உரையாடுவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளோர் அரசியலில் ஈடுபடமுடியாதென்ற சரத்தை அகற்ற வேண்டுமெனவும் சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனங்களில் ஜனாதிபதியின் தலையீடு இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் பசில் ராஜபக்ச பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் சிலருடன் உரையாடி வருவதாக அறிய முடிகின்றது.