இலங்கைத்தீவில்

எரிபொருள் தட்டுப்பாடு- வெள்ளிமுதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்

கெமுன விஜயரட்ன அறிவித்தார்
பதிப்பு: 2022 ஜூன் 14 22:46
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 19 15:12
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
எரிபொருள் தட்டுப்பாடுகளினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாதென இலங்கைத் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுன விஜயரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றும் இல்லையேல் மே மாதம் ஒன்பதாம் திகதி நடைபெற்ற வன்முறைகளைவிடக் கூடுதல் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெறலாமெனவும் அவர் கூறினார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெமுன விஜயரட்ன விளக்கமளித்தார்.
 
தனியார் பேருந்து சேவைகள் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இலங்கைப் போக்குவரத்துச் சபையின் டீசல் நிரப்பு நிலையத்தில், தனியார் பேருந்துகளுக்கும் டீசல் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால் இன்று டீசல் வழங்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து சேவையில் ஈடுபட முடியாதெனத் தெரிவித்த கெமுனு விஜயரட்ன, தனியார் பேருந்து சங்கம் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதேவேளை. அடுத்த சில வாரங்களுக்கு எரிபொருட்கள் கிடைக்காதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.