இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும்

21 ஆவது திருத்தச் சட்ட நகல்வரைபு அமைச்சரவையில் அங்கீகாரம்

விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
பதிப்பு: 2022 ஜூன் 20 22:07
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 21 21:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள் பலவற்றை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்தும் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நகல்வரைபைச் சமர்ப்பித்திருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்களுடன் நகல் வரைபு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 
நகல் வரைபு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்ற சரத்து திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். ஆனால் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டபோது எதிர்ப்பு வெளியிடவில்லை என அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

இரட்டைப் பிராஜாவுரிமை பெற்றிருந்த பசில் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.