ஆயிரத்தி இருநுாறு ஆண்டுகளுக்கு முன்னர்

சீனாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் தொடர்பு இருந்தாகக் கூறி அல்லைப்பிட்டி கப்பல்த்துறையில் சீன நிபுணர்கள் ஆய்வு

மைத்திரி- ரணில் அரசுடன் சீனா ஒப்பந்தம்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 14 17:40
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 14 20:16
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில், சில அபிவிருத்தித் திட்டங்களை ஒப்படைந்த மைத்திரி- ரணில் அரசாங்கம், தற்போது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கப்பல்த்துறைப் பகுதியில் சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆய்வு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான வர்த்தகத் தொடர்புகள் ஆயிரத்தி இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாகக் கூறி, இந்த ஆய்வில் கடந்த ஐந்து நாட்களாக ஆராய்ச்சியில் சீன ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கைத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் அவர்களோடு இணைந்துள்ளனர்.
 
யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்துள்ளபோதும், அவர்கள் இந்த ஆராய்ச்சி குறித்துக் கருத்து வெளியிட விரும்பவில்லை.

ஆரம்ப ஆய்வின்போது சீன நாட்டு நாணங்கள், கப்பல் பாகங்கள், மட்பாண்டங்கள், வழிபாட்டுக்கான பொருட்கள் சிலவற்றையும் மீட்டதாக சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்- ஆனால் யாழ் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை.

சீன அரசின் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சிலர் யாழ் அல்லைப்பிட்டி கப்பல்த்துறை பிரதேசத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளதை யாழ்ப்பாணம் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் புஸ்பரட்ணம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், சீன ஆய்வாளர்கள் கூறுவது போன்று யாழ்ப்பாணத்திற்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பாரம்பரியத் தொடர்புகள் இருந்தமை குறித்து அவர் எதுவுமே கூற விரும்பவில்லை.

ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அனுமதியுடன் 1980ம் ஆண்டு அல்லைப்பிட்டி கப்பல்த்துறைப் பிரதேசத்தில் ஆரம்ப ஆய்வு இடம்பெற்றது என்றும் அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் சீனத் தொல்பொருள் திணைக்கள ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1980 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆய்வில் கப்பல் பாகங்கள், நாணயங்கள், சமய வழிபாட்டுக்கான பொருட்கள் உள்ளிட்ட பல சான்றுகள் மீட்கப்பட்டிருந்தன.

ஆனால், இலங்கையில் அப்போது போர் ஆரம்பிக்கப்பட்டதால் அந்த ஆரம்ப ஆய்வுகள் நிறுத்தப்பட்டது என்றும் தற்போது ஜனநாயக சூழல் நிலவுவதால் ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசிடம், சீன அரசு அதிகாரபூர்வமாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளது.

இந்த அனுமதியின் பின்னர் சீன- இலங்கை அரசுகள் உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளதாகவும் அதன் பிரகாரம் யாழ் அல்லைப்பிட்டி கப்பற்துறைப் பிரதேசத்தில் தங்கியிருந்து ஆய்வுகளைச் செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் சீன தொல்பொருள் திணைக்கள ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழ் பொது நுலகத்திற்கு அருகில் இந்திய மத்திய அரசு எட்டுமாடியில் கலாச்சார மண்டபம் ஒன்றை நிர்மாணித்து வருகின்றது.

இந்த நிலையில், சுமார் எட்டுக்கிலோ மீற்றர் தொலைவில் உள்ள யாழ் அல்லைப்பிட்டி கப்பல்த்துறை பிரதேசத்தில் சீ்னா, ஈழத் தமிழர்களுடன் தொடர்புகள் இருந்ததாகக் கூறி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.