21 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால்

மாகாணங்கள் சமஸ்டி ஆட்சியைக் கோரும் நிலை உருவாகுமென்கிறார் சரத் வீரசேகரா

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த சின்னங்கள் இருந்ததாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2022 ஜூன் 21 22:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 23 22:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
பௌத்த சிங்களவர்கள் இலங்கையின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் குடியேறுவார்களென்று முன்னாள் இராணுவ உயர் அதிகாரியும், முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த சின்னங்கள் இருந்ததாலேயே அங்கு புத்த விகாரை அமைக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் குண்டர்களைப் பயன்படுத்தி அதனைத் தடுப்பதாகவும் கூறினார்.
 
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்திய சரத் வீரசேகர, 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்க முடியாதென்றார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதனால். மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களும் குறைவடைந்துவிடும் என்றும், இதனால் மாகாணங்கள் தனித்து இயங்கக் கூடிய சமஸ்டி ஆட்சி முறையை உருவாக்கும் ஆபத்து நேரிடலாமெனவும் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதன் காரணமாகவே 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதென்று சரத் வீரசேகர தெரிவித்தார்.

போர்க்காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியாகப் பதவி வகித்திருந்த சரத் வீரசேகர, 2020 நவம்பர் மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சராகப் பதவி வகித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.