யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான அரசியல் சூழல்

ஐ.நா.விடம் கடிதம் கையளித்த சில மணிநேரத்தில் காலிமுகத்திடல் போராட்டக்குழு மீது இலங்கை இராணுவம் தாக்குதல்

வெளிநாட்டு ஊடகவியலாளர் உட்பட பலர் காயம்- சட்டத்தரணி உட்பட பத்துப்பேர் கைது
பதிப்பு: 2022 ஜூலை 22 16:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 26 16:17
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல, இராணுவம் அனுமதிக்க மறுத்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத முறையில் காலிமுகத் திடல் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டிருந்தன. சட்டத்தரணி ஒருவர் உட்பட பத்துப் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு வியாழக்கிழமை மாலை கொழும்பு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட பலர் காயமடைந்தனா்.


 
போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து. வெள்ளிக்கிழமை மீண்டும் நண்பகல் முதல் காலிமுகத்திடலில். காலி வீதியை வழி மறித்து அமைதியான போராடடம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் செய்யாமல் அனைவரும் மௌனமாக வீதியில் அமர்ந்திருந்தனா். பெருமளவு பெலிஸாரும், இராணுவத்தினரும் காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகக் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த அமைதிவழிப் போராட்டத்தைத் தொடருவதாக இல்லையா என்று போராட்டக்குழு கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளது.

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டக்குழுவும் மற்றும் வேறு இடங்களில் போராட்டம் நடத்தியவர்களும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை கடிதம் கையளித்திருந்தனர்.

எதிர்காலத்தில் தங்கள் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இலங்கையின் விவகாரத்தில் ஐக்கிய நாடுகளை சபை தலையிடவேண்டும் என குறித்த கடிதத்தில் போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.நா.விடம் கடிதத்தை கையளிக்கும்போது பௌத்தமதகுருமார் பலரும் மற்றும் முக்கிய செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் ஊடாகத் தமது போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் முற்படுவதாகவும் கோராட்டக்குழு ஐ.நாவிடம் கையளித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நாவுக்குக் கடிதம் கையளிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வியாழக்கிழமை நள்ளிரவு காலிமுகத்திடல் போராட்டக்காரா்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது.

அதேவேளை, கொழும்பில் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள போராட்டத் தளத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் வியாழக்கிழமை முற்பகல் நடவடிக்கை எடுத்திருந்தது.

வியாழக்கிழமை போராட்டத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்சவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட நாள் முதல் பிரதமரின் அலரி மாளிகை முன்பாக நோ டீல் கம என்ற பெயரில் தொடர் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மாளிகை முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் அகற்றப்பட்டுப் போராட்டக்கார்களும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.