கொழும்பு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படுகின்றன

பொலிஸார் ஒலிபெருக்கியில் அறிவிப்பு- ஆனால் போராட்டக்காரர்கள் பலர் வெளியேற மறுப்பு
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 04 22:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 04 23:38
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட தளத்திலிருந்து போராட்டகாரர்களை வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததையடுத்து குறிப்பிட்ட சில போராட்டக்காரர்கள் வெளியேறி வரும் நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலினால் மேலும் போராட்டக்காரர்கள் வெளியேற மறுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவையடுத்துப் போராட்டக்காரர்கள் பலர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். கூடாரங்களும் அகற்றப்பட்டு வந்தன. இந்த நிலையில். பொலிஸார் ஒலி பெருக்கியில் வெளியிட்ட அறிவிப்பினால் சீற்றமடைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.
 
நாளை ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் நேற்றுப் புதன்கிழமையும் இன்று வியாழக்கிழமையும் அறிவித்தனர்.

இன்று மாலையும் பொலிஸார் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். வெளியேற மறுத்துள்ள போராட்டக்காரர்களுக்கு நாளை மாலை ஐந்து மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் காலிமுகத்திடல் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரும் இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நாளை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.