ரணில் அரசாங்கத்துக்கு எதிரான

எதிர்க்கட்சிகளின் கொழும்புப் பேரணி இராணுவக் குவிப்பு, கைது மற்றும் அச்சுறுத்தல் காரணமாக வெற்றியளிக்கவில்லை

சரத்பொன்சேகா இராணுவத்துக்கு விடுத்த எச்சரிக்கையும் பிசுபிசுத்தது
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 09 10:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 10 16:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அரசாங்கத்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பெரியளவில் வெற்றியளிக்கவில்லை. கொழும்பு நகரை நோக்கிப் பேரணிகள் எதுவும் வரவில்லை. ஆங்காங்கே அரச ஊழியர்கள் சில பொது அமைப்புகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு முன்பாக ஆரம்பித்த பேரணி சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தது. இரண்டாயிரத்துக்கும் குறைவானவர்களே பேரணியில் பங்குபற்றியிருந்தனர். பேரணி தொடர்பாக முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நேற்றுத் திங்கட்கிழமை விடுத்த எச்சரிக்கையினால், இன்று செவ்வாயக்கிழமை கொழும்பு நகரில் கூடுதல் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
காலிமுகத்திடல், நாடாளுமன்றக் கட்டம் ஆகியவற்றுக்குக் கடுமையான பாதகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும் எதிர்ப்பார்த்தளவு பேரணியில் மக்கள் பங்குபற்றவில்லை.

போக்குவரத்துச் சேவைகளும் வழமைபோன்று இடம்பெற்றது. பாடசாலைகள். பல்கலைக்கழகங்களில் மாணவர் வருகையும் அதிகமாகக் காணப்பட்டன.

பேரணி தோல்வியடைந்துள்ள நிலையில், நாளைமுதல் மின்சாரக் கட்டணங்கள் 75 வீதமாக அதிகரித்துள்ளன. மீண்டும் எரிபொருட் தட்டுப்பாடுகளும் அடுத்த சில நாட்களில் ஏற்படுமெனவும் கூறப்படுகின்றன.