ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின்

வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு

அடுத்த நான்கு மாதங்களுக்குரிய திட்டங்கள் மாத்திரமே என்றும் தெரிவிப்பு
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 11 22:00
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 13 23:14
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த நான்கு மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் முப்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் நிதியமைச்சராகப் பதவி வகித்திருந்த பசில் ராஜபக்ச தயாரித்த வரவு செலவுத்திட்டத்தை அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச இடை நிறுத்தியிருந்தார். கடந்த மே மாதம் இரண்டு மாதங்களுக்கான வரவுசெலவுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தையும் கோட்டாபய ராஜபக்ச பெற்றிருந்தார்.
 
இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது.

விவாதம் முப்பதாம் ஆம் திகதி ஆரம்பித்து 31ஆம் திகதியும், செப்டம்பர் மாதம் முதலாம், இரண்டாம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற நிலையியல் குழுக்கள் கூட்டத்தில் வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிக்கும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையிலும் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.