பால்மா உட்பட முந்நூறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தற்காலிகமாகத் தடை

சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் ஒப்பந்தம் என்கிறார் அமைச்சர் பந்துல
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 23 08:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 24 08:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பொருளாதார நெருக்கடியை மையமாக் கொண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பொதியிடப்பட்ட பால்மா வகைகள் உட்பட முந்நூறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானி இதழ் இரவு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
அந்நியச் செலவாணி குறைவடந்து செல்லும் நிலையில், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு டொலர்களைப் பயன்படுத்த முடியுமென நிதியமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சர்வதேச நாயண நிதியம் விதித்த பரிந்துரைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. குறிப்பாக அரசு ஊழியர்கள் சுமார் ஆறு இலட்சம்பேரை பணியில் இருந்து இடை நிறுத்தல், மின்சார சபை, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் உள்ளிட்ட பன்னிரெண்டு அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தல் போன்ற நிபந்தனைகள் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்டுள்ளன.

இதன் காரணத்தினாலேயே தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணயத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தொிவித்துள்ளார். விதிக்கப்பட்ட பல நிபந்தனைகள் பலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும். ஆனாலும் சில நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாதெனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.