கொழும்புக்கு வருகை தந்த

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்டப்பேச்சு
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 24 21:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 26 11:42
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்புக்களை நடத்தியபோதும், விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பலவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் புதன்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட உரையாடல்களில் திருப்தி இல்லையென நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கமோ, சர்வதேச நாணய நிதியமோ அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவுமே தெரிவிக்கவில்லை.
 
ஆனாலும் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கடும் நிபந்தனைகள் பலவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்கத் தயங்குவதாகவும் கடன் திட்டங்களை இலகுபடுத்துமாறு கோரியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இன்றைய முதல்நாள் சந்திப்பின்போது, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுடனும சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கலந்துரையாடியுள்ளது.

இந்தச் சந்திப்புக்களின் பின்னர் இலங்கையின் நிதி மற்றும் சட்ட ஆலோசனைக்காக வெளிநாடுகளில் இருந்து அமர்த்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பேச்சு நடத்தியுள்ளனர்.

நாளை மறு நாள் வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் நடைபெறவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், (Peter Breuer) பிரதித் தலைவர் மசாஹிரோ நோசாக்கி, டுபாகஸ் பெரிதானுசெட்யவான், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட பலர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.