தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினரால்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சர்வதேச நீதிகோரிப் போராட்டம்- பெருமளவு மக்கள் பங்கேற்பு

முல்லைத்தீவில் இரண்டாயிரம் நாட்களைக் கடந்து போராட்டம்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 30 22:09
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 30 22:31
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கைத்தீவில் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினரால் 2009 இற்கு முன்னரும் அதன் பின்னரான சூழலிலும் கடத்தப்பட்டும் சரணடைந்தும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரி இப் போராட்டம் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டம் இரண்டாயிரம் நாட்களைத் கடந்த நிலையில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 
2009 ஆம் ஆண்டுப் போரின் பின்னரான சூழலில் இலங்கை இராணுவத்திடம் கையளித்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு மற்றும் பல்வேறு வழிகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடித் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இறுதிப் போர் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாயிரம் நாட்களைக் கடந்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நடந்தது என்ன என்று கேட்டு சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தகர்ளும் தமது கடைகளை மூடி காலை முதல் நண்பகல் 12 மணிவரை போட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.