தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்

ரணில் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

முப்பத்து ஐந்துபேர் பதவியேற்பர்- அதிகமானோர் ராஜபக்ச ஆதரவு உறுப்பினர்கள்
பதிப்பு: 2022 செப். 07 09:13
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 08 10:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. முப்பத்து ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியுடன் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுன பரிந்துரைத்த தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக பெதுஜன பெரமுனக் கட்சி கூறியுள்ளது.
 
இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும், அவர்களுக்குரிய குறிப்பிட்ட வேலைத் திட்டங்கள் எதனையும் வர்த்தமானியில் வெளியிட வேண்டாம் எனவும், இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது அமைச்சரவை அமைச்சருக்குரிய அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

பிரதான எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் அல்லது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவ்வாறான அரசாங்கத்தை அமைக்க இணக்கம் ஏற்படவில்லை.

இந்த நிலையிலேயே இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இடம்பெறுகின்றது.