இலங்கைத்தீவில்

ரணில் அரசாங்கத்துக்கு எதிராக பௌத்த குருமார் ஆர்ப்பாட்டம்

தொடர் போராட்டத்திற்கு அழைப்பு
பதிப்பு: 2022 செப். 10 22:22
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 12 00:11
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் பௌத்த குருமார் மாபெரும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே, சிறிதர்ம தேரர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவே பௌத்த குருமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். கொழும்பு ஸ்ரீ போதிராஜா மாவத்தையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படுமென பௌத்த குருமார் கூறியுள்ளனர். சனிக்கிழமையும் பௌத்த குருமாரின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
 
ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கைத்தீவில் அத்தியாவசிய தேவைகளின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளமைக்கும் பௌத்த குருமார் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பிக்குகள் கலந்து கொண்டுள்ளதுடன், தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இப் போராட்டம் கொழும்பு மாவட்டத்துக்கு வெளியிலும் நடத்தப்படும் என்றும் பௌத்த குருமார் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.