இலங்கை விவகாரம்

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட உள்ளக விசாரணைப் பொறிமுறை போதும் என்கிறரர்
பதிப்பு: 2022 செப். 12 10:39
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 14 13:50
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஜெனீவா மனித உரிமைச் சபையின் 46/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையின் 52 ஆவது அமர்வு ஆரம்பமாகியபோது இலங்கை விவகாரம் தொடர்பான பரஸ்பர உரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். சுயாதீன உள்நாட்டுப் பொறிமுறையை வலுப்படுத்தத் தேவையான ஆதரவு மற்றும் வளங்களை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமெனவும் அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
 
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய ஒரு சட்டத்தை அமுல்படுத்தும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உரிய முறையில் செயற்படுத்தப்படுமெனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இலங்கையில் புலம்பெயர் மக்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதன் ஊடாகப் புலம்பெயர் மக்களோடு தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தலாம் என இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

அமர்வு ஆரம்பித்த முதல் நாளில் மியன்மார் நிலவரங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்ட பதில் ஆணையாளர் இலங்கையின் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.