இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- எதிர்க்கட்சிகள் கண்டனம்

அரச செலவுகளைக் குறைக்க வேண்டுமென்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை எனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2022 செப். 19 23:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 20 11:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அமைச்சர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்படுவது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியினால் இலங்கை மீள எழும்ப முடியாத நிலையில் இருக்கும் போது அமைச்சர்களின் எண்ணிக்கை அவசியமற்றது என கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு தசம் ஒன்பது பில்லியன்களை வழங்கப் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
 
குறிப்பாக அரச செலவுகளைக் குறைக்க வேண்டுமென்பது முக்கிய நிபந்தனையாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், ராஜபக்சக்களின் கட்சியின் அழுத்தங்களை ரணில் விக்கிரமசிங்க எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் திங்கட்கிழமை இரவு தனியார் இலத்திரனவியல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ஹர்சா டி சில்வா இவ்வாறு கூறினார்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டாமென ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சஜித் பிரேமதாச எடுத்துக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜே.வி.பியும் கண்டனம் வெளியிட்டுள்ளது.