கொழும்பு மருதானையில் அமைக்கப்பட்டுள்ள

தாமரைக் கோபுரத்தின் கடனைச் செலுத்த, நாளாந்தம் 41 ஆயிரம் டொலர்கள் வருமானம் பெறப்பட வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுகிறார்
பதிப்பு: 2022 செப். 25 05:49
புதுப்பிப்பு: செப். 30 20:45
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு மருதானைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம், இலங்கைக்கு அதிகளவு கடன் சுமைகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனை முழுமையாக செலுத்த வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் நாற்பத்து ஓராயிரம் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சனிக்கிழமை கொழும்பில் தெரிவித்துள்ளார்.
 
கோபுரத்தை நிர்மாணிக்க மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், தாமரைக் கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்குவதற்காக நான்கு தசம் ஐந்து மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வசித்த பலர் இன்னமும் மீளக் குடியமர்த்தப்படவில்லை என்றும் அவர்களை குடியமர்த்துவதற்கு மேலதிகமாக ஐம்பத்து ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும் கூறினார்.

மீளக் குடியமர்த்தல் செயற்பாடுகளுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் தீர்வு காண வேண்டும் எனவும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இதேவேளை, தாமரைக் கோபுரக் கட்டடத் தொகுதிகள் இன்னமும் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் உள்ளுர் முதலீட்டாளர்கள் அங்குள்ள அறைகளை வாடகைக்குப் பெற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அதி உயர்வான கட்டணங்கள் பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது.