பொருளாதார நெருக்கடியின்போது

இந்தியா நான்கு மாதங்களில் தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியது

சுமார் நாற்பத்து நான்காயிரம் மெற்றிக் தொன் உரமும் வழங்கப்பட்டிருக்கிறது
பதிப்பு: 2022 செப். 25 06:15
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 01 23:11
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் மார்ச் மாதம் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடியின் பின்னரான நான்கு மாதங்களில் இந்தியா தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு மில்லியன் டொலர்களைக் கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இந்தியா மாறியுள்ளதாக டெய்லி பைனான்சியல் டைம்ஸ் கூறுகின்றது. இலங்கையின் மொத்தக் கடனில் அதிகளவு கடன்கள் சீனாவுக்கு உரியது. ஆனாலும் கடந்த நான்கு மாதங்களில் இந்தியா வழங்கிய கடன் தொகையின் அளவு மிகவும் கூடுதலானது என்றும், அதன் கடன் ஊடாகவே பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளிக்க முடிந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
கடந்த ஐந்து ஐந்து ஆண்டுகளில், தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழு மில்லியன் டொலர்கள் கடனை சீனா இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இக் கடனில் எண்ணூற்று ஒன்பது மில்லியன் டொலர்கள் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து சந்தைக் கடனாகப் பெறப்பட்டுள்ளதாக டெய்லி பைனான்சியல் டைம்ஸ் ஆங்கில இதழ் கூறுகின்றது.

2021 ஆம் ஆண்டில் அறுநூற்றுப் பத்து மில்லியன் டொலர்கள் நிதியை சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் சுமார் நாற்பத்து நான்காயிரம் மெற்றிக் தொன் உரத்தை உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் நோக்கில் இலங்கை விவசாயிகளுக்கு இந்தியா வழங்கியிருந்தது.