பொருளாதார நெருக்கடித் தீர்வுக்காக

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்டிக்கை இதுவரை முழுமை பெறவில்லை என்கிறார் பிரதமர்

விமல் வீரவன்சவின் கேள்விக்கு மறுப்பு-
பதிப்பு: 2022 ஒக். 04 21:00
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 04 22:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பொருளாதார நெருக்கடித் தீர்வுக்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்ட ஊழியர்மட்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த நிபந்தனைகள் பலவற்றை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் குறித்த உடன்படிக்கை தொடர்பாக குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். காரணத்தையும் அவர் கேட்டுள்ளார்.
 
செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விமல் விரவன்ச இவ்வாறு கேள்வி எழுப்பியதுடன், உடன்படிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

உடன்படிக்கையில் என்ன இருக்கின்றது என்பது தொடர்பாக மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும், மக்களுக்கு மூடிமறைத்து எதையுமே செய்ய முடியாதெனவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

அதேவேளை, விமல் வீரவன்சவின் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்டிக்கைக்கான வரைபு மாத்திரமே செய்யப்பட்டுள்ளது என்றும், இன்னமும் ஒப்பந்தம் முழுமை பெறவில்லை எனவும் கூறினார்.

ஆனால் அதனை மறுத்துக் கருத்துக் கூறிய விமல் வீரவன்ச இலங்கையுடன் உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்கள் சிலரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்ததாகச் சுட்டிக்காட்டினார்.

ஆனால் பிரதமர் தினேஸ் குணவர்த்தன அதனை மறுத்துரைக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் கூடிய இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்களை வழங்குவது தொடர்பாக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகக் கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.