பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு விவகாரங்கள்

இலங்கைக்குத் தொடர்ந்து உதவியளிக்க அமெரிக்கா உறுதி

ரணிலுடனான அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அறிவிப்பு
பதிப்பு: 2022 ஒக். 20 09:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 27 01:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற கடன் திட்டங்களுக்கு மேலதிகமாக அமெரிக்க நிதியுதவி இலங்கைக்கு நேரடியாகக் கிடைக்குமென தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வமாகக் கொழும்புக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை புதன்கிழமை மாலை சந்தித்தார். கொள்பிட்டி காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடன் மறுசீரமைப்புப் பற்றியே அதிகமாக உரையாடல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவை டொனால்ட் லூ பாராட்டினார். சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து இருவரும் உரையாடியுள்ளனர்.

ஆனாலும் இருவரும் பேசிய விடயங்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்க முன்னதாக, டொனால்ட் லூ வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியையும் சந்தித்தார்.

இச் சந்திப்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே (Susan Walke) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.