இலங்கை ஒற்றையாட்சி அரசின்

சுயாதீன ஆணைக் குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும்

தற்போதைய ஆணையாளர்கள் இடைக்கால ஆணையாளர்களாக செயல்படுவார்கள்-அமைச்சர் விஜயதாச
பதிப்பு: 2022 ஒக். 23 09:32
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 25 12:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கை ஒற்றையாட்சி அரசின் இருபத்து இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தற்போது செயற்படும் அனைத்துச் சுயாதீன ஆணைக் குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். சபாநாயகர் அனுமதி வழங்கியதன் பின்னர், குறித்த திருத்தம் அமுலுக்கு வரும் என்று கூறிய அமைச்சர் புதிய ஆணையாளர்கள் நியமிக்கப்படும் வரை, தற்போதைய ஆணையாளர்கள் இடைக்கால ஆணையாளர்களாக செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
 
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதி சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேசிய கொள்வனவு ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, பொது சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

அரசியலமைப்புப் பேரவைக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். மேற்படி ஆணைக்குழுக்களுக்கு புதிய ஆணையாளர்கள் அடுத்த வாரங்களில் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் இருபத்து இரண்டாவது திருத்தச் சட்டமூலம் 178 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கு மாத்திரமே பெறப்பட்டுள்ளது. முன்னர் இராணுவ உயர் அதிகாரியும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர இதற்கு எதிராக வாக்களித்தார்.

பின்னர் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகள் பெறப்பட்டன. குறித்த திருத்தச் சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாகக் குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பாக வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றன. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாற்பத்து நான்கு பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சபைக்குச் சமூகமளிக்கவில்லை.