பொருளாதார நெருக்கடி தொடரும் நிலையில்

அமெரிக்க உதவிகளை மேலும் அதிகரிக்க முடிவு

இரண்டு வாரங்களில் இரண்டு இராஜதந்திரிகள் கொழும்புக்கு வருகை
பதிப்பு: 2022 ஒக். 25 21:24
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 27 01:43
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் கொழும்புக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கொழும்புக்கு வருகை தந்த அவர் இன்று பல சந்திப்புக்களில் கலந்துகொண்டார். ரொபர்ட் கப்ரோத்தின் கொழும்புப் பயணம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படுமென அமெரிக்கா எற்கனவே கூறியிருந்த நிலையில் இருவாரத்துக்குள் இரண்டு அமெரிக்க இராஜதந்திரிகள் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.
 
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் கொழும்பில் உள்ள முதலீட்டாளர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

இரண்டு நாள் பயணமாகக் கொழும்புக்கு வருகை தந்துள்ள ரொபர்ட் கப்ரோத். கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலரையும் இன்று மாலை சந்தித்ததாகக் கூறப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற கடன் திட்டங்களுக்கு மேலதிகமாக அமெரிக்க நிதியுதவி இலங்கைக்கு நேரடியாகக் கிடைக்குமென தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ கடந்த வாரம் கொழும்பில் கூறியிருந்தாா்.

அதிகாரபூர்வமாகக் கொழும்புக்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை புதன்கிழமை மாலை சந்தித்தபோது இவ்வாறு கூறியிருந்தார்.

சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிவிடுமெனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்கா இலங்கை மீது அதிக கரிசனை கொண்டுள்ளமை இராஜாங்கச் செயலாளர்களின் கொழும்பு வருகை மூலம் தெரியவருகின்றது.