இலங்கை ஒற்றையாட்சியின் கட்சி அரசியல்-

ரணில் - மகிந்த அணி கூட்டு- ரவி, பிரசன்ன ரணதுங்க பேச்சு

அன்னம் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை
பதிப்பு: 2022 ஒக். 26 22:08
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 27 01:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்குள் முரண்பாடுகள் வலுவடைந்து வருகின்றன. டளஸ் அழகபெருமா தலைமையில் ஏற்கனவே பன்னிரெண்டு உறுப்பினர்கள் கொண்ட அணி பிரிந்து சென்று தேசிய சுதந்திர சபை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் மற்றுமொரு அணி பிரிந்து சென்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இது தொடர்பான பேச்சுக்களை நடத்தி வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்கள் பலருடன் ரவி கருணாநாயக்கா உரையாடி வருவதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக கண்டி, கம்பஹா, காலி, பொலனறுவை, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அன்னம் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும்

இந்த நிலையிலேயே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரவி கருணாநாயக்காவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.