இலங்கைத்தீவில்

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கவே கூடாதென்கிறார் சரத் வீரசேகரா

பிராந்தியத்தில் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் கூறுகிறார்- அதிகாரப்பரவலாக்கமே சிறந்தது என்கிறாா்
பதிப்பு: 2022 நவ. 18 09:15
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 18 14:34
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
அரசியல் யாப்புக்கு அமைவாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாதென இலங்கை இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரியும், ராஜபக்ச் குடும்பத்துக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய அமைதிக்காக்கும் படையைத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பித் தோல்வியடைந்ததாலேயே இந்தியா இலங்கையில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது என்றும் அவர் கூறினார். வியாழக்கிழமை இடம்பெற்ற வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.
 
வடக்குக், கிழக்கு மாகாணத்துக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் பிரிவினைவாத கருத்துகள் வளர்ச்சியடையும். இதனால், பிராந்தியத்தில் வல்லரசாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

வடக்குக், கிழக்கு மாகாணத்துக்குக் கூடுதல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் இலங்கையிலிருந்து அந்த இரண்டு மாகாணங்களும் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கும்.

ஆகவே அதிகாரப் பகிர்வை வழங்கக்கூடாது. அதற்குப் பதிலாக அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் மாத்திரமே இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பாதுகாப்பு என்று கூறிய சரத் வீரசேகர, இந்திய அரசுடன் இலங்கை நட்புறவைத் தொடர்ந்து பேண வேண்டும் எனவும் வற்புறுத்தினார்.