ரணில் விக்கிரமசிங்கவின் வரவுசெலவுத் திட்டத்தை

சஜித் - மைத்திரி அணி மற்றும் ஜே.வி.பி எதிர்த்து வாக்களிக்க முடிவு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அறிவிக்கவில்லை
பதிப்பு: 2022 நவ. 21 07:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 23 22:38
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.
 
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை அறிவிக்கவில்லை. எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக ஜே.வி.பி ஏற்கனவே கூறியிருந்தது.

வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பிற்கான விவாதம் சென்ற பதினைந்தாம் திகதி முதல் நாளை 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை வரை இடம்பெற்று வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழு நிலை விவாதம் நாளை மறுதினம் இருபத்து மூன்றாம் திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் எட்டாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் எட்டாம் திகதி மாலை நடத்தப்படவுள்ளது.