தமிழர் தாயகப் பிரதேசங்களில்

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரா் நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 6.05 க்குத் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர்
பதிப்பு: 2022 நவ. 27 08:31
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 04 15:38
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகம் வடக்குக் கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. சென்ற பதினைந்தாம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள், ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 க்கு அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. பெருமளவு மக்கள் பங்குபற்றினர். மலர் தூபி தீபம் ஏற்றி இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக, கிழக்குப் பல்கலைக்கழக, மாணவர்களால் போராட்டத்தில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
 
மாலை 6.05 மணிக்கு மணி ஒலி எழுப்பலுடன் ஆரம்பித்து ஒரு நிமிட வணக்கம் செலுத்தினர். 6.07 க்குப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னர் மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை. அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் மாவீரா் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிகரமாக இடம்பெற்றன.

யாழ்பாணம் தீவகம் சாட்டி, கோப்பாய், கொடிகாமம், உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்ன.

அம்பாறையில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.