இலங்கை எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவில்லையானால் போராட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழு இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சுமத்துகிறார் நளின்
பதிப்பு: 2022 டிச. 02 22:54
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 05 21:38
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
முறைப்படி நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தாமல் தேர்தல்கள் ஆணைக்குழு இரட்டை வேடம் போடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவுசெலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல் ஆணைக்குழுவை முற்றுகையிடும் நிலை ஏற்படும் என்றும் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தயாராக வேண்டும். ஆனால் அது பற்றி எதுவிதமான கருத்துக்களையும் கூறாமல் அரசாங்கம் அமைதி காக்கிறது.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு கதையும் அரசாங்கத்திடம் மற்றுமொரு கதையும் கூறி இரட்டை வேடம் போடுகின்றனர்.

இது மிகவும் ஆபத்தானது என்று கூறிய அவர், ஊள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படாது போனால் மக்கள் வீதிக்கு இறங்கும் நிலை எற்படும் எனவும் கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தாளத்துக்கு ஏற்பச் செயற்படும் தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்பட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரம் உள்ளது என்றும் நளின் பண்டார கூறினார்.