இலங்கைத்தீவு ஒரே நாடு என்கிறார் சஜித் பிரேமதாசா

அனைத்துக் கட்சி மாநாட்டில் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து எதுவுமே கூறவில்லை
பதிப்பு: 2022 டிச. 14 23:18
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 15 00:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கைத்தீவில் இனவாதம், பிரிவினைவாதம், மதவாதம் போன்றவற்றை நிராகரிக்கும் சட்ட விதிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளாா். செவ்வாய்கிழமை கொழும்பில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இலங்கைத்தீவு ஒரே நாடு என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்து உரிய கருத்துக்களை சஜித் பிரேமதாச முன்வைக்கவில்லை. ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமெனக் கூறினார். ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன, மதம், சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சஜித் பிரேமதாசா கூறினார்.
 
அனைத்து இன மக்களிடையே நம்பிக்கையை உறுதி செய்வது அவசியம். அரசியல் ரீதியாக மற்றும் கருத்தியல் ரீதியாக நிலவும் வேறுபாடுகள் மதிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையற்ற முறையில் உறுதிமொழிகளை வழங்குவதாக முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்கை ரணவக்க தெரிவித்துள்ளார். புதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும்.

இதனால் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர் புதிய அரசியல் யாப்பு அவசியமானது எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் காணி பொலிஸ் அதிகாரங்களை கொழும்பு நிர்வாகம் மீளப்பெற வேண்டும் எனவும் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாதென்றும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கடற்படை உயர் அதிகாரியுமான சரத் வீரசேகர குறித்த தனியார் இலத்திரனியல் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இனப்பிரச்சினையை எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்ப்பேன் என்று பொய் வாக்குறுதியளித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.