இலங்கைத்தீவின் தலைநகர்

கொழும்பில் பிரபல வர்த்தகர் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்

காரணம் தெரியவில்லையெனப் பொலிஸார் கூறுகின்றனர்
பதிப்பு: 2022 டிச. 15 23:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 16 15:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
பிரபல தொழிலதிபரும், ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவருமான தினேஸ் ஷாப்டர் (Dinesh Schaffter) கொழும்பில் வியாழக்கிழமை மாலை கடத்தப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோதும். அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொரளை கனத்தை மைதானத்தில் அவருடைய வாகனத்தில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதித்ததாகப் பொரள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறுகின்றனர்
 
தினேஸ் ஷாப்டர் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயர் பாதுகாப்பு வலயமான கொழும்பு நகரில் பிரபல தொழில் அதிபர் கடத்தப்பட்டமை தொடர்பாகப் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொள்பிட்டியில் வாகன விபத்தை ஏற்படுத்தி ஒருவர் மரணமடைவதற்குக் காரணமாக இருந்த உயர் நிலை அரசியல் செல்வாக்குடைய ஒருவர், அடுத்த சில மணி நேரத்திலேயே பாதுகாப்பாக வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.