நீண்டநேர விசாரணைக்குப் பின்னர்

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது

கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவா்
பதிப்பு: 2023 ஜன. 02 22:29
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 03 02:39
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதி டில்ஷன் ஹர்ஷன ஆகிய இருவரும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு முதலில் அழைப்பு விடுக்கபட்டது. அழைப்பை ஏற்று இரண்டு மாணவர்களும் தலங்க பொலிஸ்நிலையத்திற்கு இன்று நண்பகல் சென்றனர். பல மணி நேர விசாரணையின் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஜூலை பத்தாம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கல்வி அமைச்சின் வால் கதவுகளைச் சேதப்படுத்தியமை தொடர்பாகவே இரு மாணவர்கள் மீதும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.

இருவரது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், நாளை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இருவரும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும்சட்டத்தரணி தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை கடுவெல நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.