உள்ளூராட்சி பைத் தேர்தல்-

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல்

பெப்ரல் அமைப்பு கண்டனம். சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றம்சாட்டு
பதிப்பு: 2023 ஜன. 19 21:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 21 12:59
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்குக் கிழக்கு உட்பட இலங்கைத்தீவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தலைக் கண்காணிக்கும பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி றோகன ஹெட்டியாராட்சி தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அவர், உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம முறையிட்டுள்ளதாகவும் கூறினார்.அச்சறுத்தல்களுக்கு உள்ளான அதிகாரிகளுக்கப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுதந்திரமாகத் தேர்தல் கடமைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் றோகன ஹெட்டியாராட்சி வேண்டுகோள் விடுத்துளார்.
 
தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளின் பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகத் தமக்கும் தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களைக் காரணம் கூறித் தேர்தலைப் பிற்போட அரசாங்கம் முற்படுவதாகவும், அரசாங்கம் நேர்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த உயர் அச்சுறுத்தல்கள் தொடர்பாக கொழும்பில் உள்ள மாற்றுக் கொள்கை மையம், தேசிய சமாதானப் பேரவை போன்ற பொது அமைப்புகளும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்படமாட்டாது என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.