உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை

தேர்தலைக் கண்காணிக்கும் பெப்ரெல் அமைப்பு பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம்
பதிப்பு: 2023 ஜன. 30 22:14
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 31 07:18
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து தேர்தலைக் கண்காணிக்கும் பெப்ரல் அமைப்பு பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. உயிர் அச்சுறுத்தல் விடுத்தமைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதற்குப் பின்னால் உள்ள அரசியல் செல்வாக்குத் தொடர்பாக பெப்ரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
 
அதேவேளை, மரண அச்சுறுத்தல்களுக்கு உள்ளான ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு உடனடி பாதுகாப்பை வழங்கியதற்காக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி பொலிஸ் மா அதிபருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் பன்னிரென்டு நாட்கள் சென்று விட்ட நிலையில். சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணங்களை பொலிஸ் மா அதிபர் வெளியிட வேண்டுமென பெப்ரல் அமைப்புக் கோரியுள்ளது.

உயிர் அச்சறுத்தல் வெளிநாடு ஒன்றில் இருந்து விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இலங்கைப் பொலிஸாரின் சர்வதேச வலைப்பின்னல்கள் மூலமாக பொலிஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமெனவும் பெப்ரல அமைப்பு கடிதத்தில் கூட்டிக்காட்டியுள்ளது.