இலங்கைத்தீவில்

பதின்மூன்றுக்கு எதிராகக் கொழும்பில் பிக்குமார் போராட்டம்

ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் எச்சரிக்கை
பதிப்பு: 2023 பெப். 08 22:45
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 11 23:00
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
பதின்மூன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தனது கொள்கை விளக்கவுரையின்போது கூறியபோது. கொழும்பில் பௌத்த குருமார் பதின்மூன்றுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகப் பெருந்திரளான பெளத்த பிக்குமார் கொழும்பில் நடத்திய பேரணியால் கொழும்பு நகரம் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக ஸ்தம்பிதமடைந்தது. கலகமடக்கும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
 
ஆனால் பதின்மூன்றுக்கு எதிரான போராட்டத்தினால் கொழும்பில் பதற்றம் நிலவியது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் பௌத்த குருமார் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவே அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்ததை தற்போதுள்ள அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்று எல்லே குணவன்ச தேரர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அரசாங்கத்துக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார். பதின்மூன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால், ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் தேரர் கூறினார்.