இலங்கைத்தீவில்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லை- அமைச்சர் பந்துல

எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் என்கிறார்
பதிப்பு: 2023 பெப். 15 22:44
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 19 07:07
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் இல்லையென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நிதி இல்லை என்பதால் வாக்காளர் அட்டை மற்றும் தேர்தல் செயற்பாடுகளுக்குரிய அச்சுப் பதிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாகத் தனியார் இலத்திரனியல் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்த முடியுமென உயர்நீதிமன்றம கூறியுள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சர் கூறினார்.

தேர்தல் ஒத்திவைக்கப்படுமென எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. சில ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களைக் குழப்புகின்றன.

ஆனால் தேர்தல் ஒத்திவைக்கப்படுமென இதுவரையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார். அதேவேளை நிதிப் பற்றாக்குறை உள்ளமையினால் தேர்தலுக்கான செலவுகள் பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும், போதிய நிதி இல்லாமையினால் தேர்தல் தொடர்பான பணிகளில் தாமதங்கள் ஏற்படுவதாகவும் இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.