இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்குமா?

பெரும் நெருக்கடி ஏற்படும் என்கிறார் நிதியமைச்சின் அதிகாரி
பதிப்பு: 2023 பெப். 23 10:57
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 25 23:04
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அரச ஊழியர் மட்டத்தில் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரண்டு தசம் ஒன்பது பில்லியன்களை எதிர்வரும் மார்ச் மாதம் பெற இலங்கை அரசாங்கம் கடும் முயற்சி எடுத்து வருவதாக கொழும்பில் உள்ள நிதியமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நான்கு அதிகாரபூர்வ கலந்துரையாடல்களையும், மேலும் இரண்டு ஊழியர் மட்ட உரையாடல்களையும் நடத்தியுள்ளதாகக் கூறியுள்ள நிதியமைச்சின் அதிகாரி ஒருவர், சீனா கடன் மறுசீரமைப்பு விடயத்தில் நம்பிக்கை தரும்படியான பதில் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
 
இலங்கையின் நிதி நெருக்கடி தொடர்பான முக்கிய விடயங்கள் பலவற்றை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் நிதியமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளர் கூட கருத்துக்களை வெளியிட முடியாத சூழல் நிலவுவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.

மார்ச் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைக்கவில்லை என்றால், பாரிய நெருக்கடி ஒன்றை மக்கள் சந்திக்க நேரிடும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.