ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்ய முடிவு

எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம்
பதிப்பு: 2023 பெப். 26 20:27
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 02 21:19
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றத்தில் மனுச் செய்யவுள்ளதாக ஜே.வி.பியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்படும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
அதேவேளை அரச அதிகாரிகள் தேர்தலை நடத்துவதில் தடையாக செயற்படுகின்றமை தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மக்களின் வாக்குரிமையை பாதுகாத்து இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் விஜத ஹேரத் மேலும் கூறினார்.

இதேவேளை, தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சிகள், பொது அமைப்புகள் கொழும்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறவிக்கவுள்ளது.

அநேகமாக தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான அவிப்பு வெளிவரும் என்பதாலேயே எதிர்க்கட்சிகள் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றன.