உள்ளூராட்சி சபைத் தேர்தல் போராட்டம்

இலங்கை பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஜே.வி.பி வேட்பாளர் பலி

ரணில் விக்கிரமசிங்கவின் அராஜகம் என்று கண்டனம்
பதிப்பு: 2023 பெப். 27 21:06
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 02 21:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்படவுள்ளமைக்கு எதிராக ஜே.வி.பி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கக் கலகமடக்கும் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் குண்டாந்தடியடி ஆகியவற்றில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜே.வி.பியின் நிவித்திகல பிரதேச சபை வேட்பாளரான நிமல் அமரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.
 
தமது உறுப்பினர் உயிரிழந்ததை ஜே.வி.பியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

பொலிஸார் நடத்திய தாக்குதலில் இருபத்து எட்டுப்போர் காயமடைந்து சிக்சிச்சை பெற்று வருவதாகவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பொலிஸார் நடத்திய தாக்குதல், அரசியல் போராட்டங்களை முடக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அராஜகம் என்று ஜே.வி.பி கண்டித்துள்ளது.