இலங்கைத்தீவில்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு சஜித் அணி கோரிக்கை

மத்திய வங்கித் திருத்தச் சட்டமூலத்திற்கும் எதிர்ப்பு
பதிப்பு: 2023 மார்ச் 29 22:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 08 21:54
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
எரிபொருள் சந்தை தாராளமயமாக்கல், மத்திய வங்கி திருத்தச் சட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கருத்துக்களை முன்வைத்த சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்கள் அங்கீகாரம் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி புதிய அங்கீகாரத்தைப் பெற்றால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் விளக்கினர்.
 
ரணில் அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை விரைவில் ஏற்றுக்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்டபோது அதனை மறுத்த ஹர்ஷா டி சில்வா, அரசாங்கத்தின் பலவீனங்களை மறைக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், மற்றும் மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் பாதகமான அம்சங்கள் காணப்படுகின்றன. என விக்கிரமரத்ன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட உண்மையான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று எரான் விக்கிரமரத்ன ஹர்சா டி சில்வா ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.