பொருளாதார நெருக்கடிச் சூழலில்

சஜித் அணியில் இருந்து மூவர் ரணில் அரசாங்கத்துக்குச் செல்வர்

அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படுமெனக் கூறப்படுகின்றது.
பதிப்பு: 2023 ஏப். 04 09:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 13 14:33
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகக் கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த போதும், அதனை சஜித் பிரேமதாச மறுத்திருந்தார். ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியான தகவல்களின் பிரகாரம் மூன்று உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரியவருகின்றது. பொருளாதார நிபுணரும் கொழும்பு மாவாட்ட உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வா, மற்றும் ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகிய மூன்றுபேரும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன
 
சென்ற கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த ஹர்சா டி சில்வா, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி அங்கீகாரம் பெற வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அத்துடன் அரசாங்கத்துடன் இணையும் நோக்கம் இல்லை என்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாகவும் கூறியிருந்தர்.

ஆனாலும் மற்றொரு ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், பொருளாதார நெருக்கடிச் சூழல் கட்சி அரசியலைப்பாராது, தேசத்தைக் கட்டியெழுப்புவதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஹர்ச டி சில்வா கூறியிருந்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. குறித்த மூன்று பேருக்கும் அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படுமெனவும் கூறப்படுகின்றது.