சீன அரசின் ஆதிக்கம் குறித்து

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திப்பார்- மஹிந்த டில்லிக்குச் செல்வார்

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் நலன்சார்ந்தே தமிழர் பிரச்சினைத் தீர்வு விவகாரம்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 26 16:10
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 27 16:44
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சீன அரசின் இலங்கை மீதான ஆதிக்கம் தொடர்பாக இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிருப்தியடைந்து, சில மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து உரையாடவுள்ளார். குறிப்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் தமிழர் தாயகத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகம் உள்ளிட்ட விடயங்களில் மைத்திரி- ரணில் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்வதாக இணக்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சில மாறுதல்கள் ஏற்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
ஆனாலும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த விடயங்களில் மாற்றங்கள் எதுவுமே ஏற்படாது எனவும் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குல நாடுகளின் நலன்சார்ந்தே ஈழத்தமிழர் விவகாரத்தை மைத்திரி- ரணில் அரசாங்கம் கையாளும் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த மாத இறுதியில் நேபாளத்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்ரெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அங்கு பயணம் செய்யவுள்ளார்.

இந்தியப் பிராமர் நரேந்திர மோடியும் நேபாளத்திற்குச் செல்லவுள்ளார். மாநாடு முடிவடைந்ததும் இருவரும் சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடுவார்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் எதிர்வரும் 30, 31ஆம் திகதிகளில் பிம்ஸ்ரெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்து சென்ற பின்னர் அமெரிக்கக் கப்பல் ஒன்று தொள்ளாயிரம் கடற்படை உயர் அதிகாரிகளுடன் சென்ற வெ்ள்ளிக்கிழமை திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பதினொராம் திகதி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.

புதுடில்லியில் பலவேறு சந்திப்புக்களிலும் அவர் ஈடுபடவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணாவ்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் மாகாண சபைகள் தேர்தல் நடைபெற்று, அடுத்த ஆண்டு முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாஜ ராஜபக்சவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க அமெரிக்கா இரகசிய நகர்வு மேற்கொள்வதாக கூர்மைச் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆகவே இவற்றை அடிப்படையாக வைத்தே இந்தியா. ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை மீதான தமது கவனத்தைச் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.