யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு

நாகர்கோவில் பிரதேசத்தில் உள்ள நாச்சிமார் ஆலயத்தை இலங்கை இராணுவத்திடம் இருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கை

மாமிச உணவுகளை சமைத்து உண்பதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 28 06:49
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 28 07:29
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயம் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இலங்கை இராணுவத்தின் கட்டுப்பபட்டில் உள்ளதாகவும் அங்கு நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் மாமிச உணவுகளை சமைத்து உண்பதாகவும் ஆலய தர்மகத்தா சபை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆலயத்தை இலங்கை இராணுவத்திடம் இருந்து மீட்டுத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதியிடமும் ஆலய தர்மகத்தா சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு முதல் நாச்சிமார் ஆலயத்தையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் இலங்கை இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அங்கு பொதுமக்கள் எவரும் செல்ல முடியாதவாறு முற்கம்பி வேலிகளை இலங்கை இராணுவம் அமைத்துள்ளது.
 
அங்குள்ள பொது மக்களின் வீடுகளிலும் இலங்கை இராணுவம் தாங்கியுள்ளது. ஆலயத்திற்கு அருகாக முகாம் அமைக்கப்பட்டிருந்தாலும் ஆலய வளாகத்தில் வைத்து மாமிச உணவுகளை இராணுவத்தினர் சமைத்து உண்பதாகவும் அதன் பின்னர் ஆலயத்திற்குள் நடமாடுவதாகவும் தகவல் கடைத்துள்ளதாக ஆலய தர்மகத்தா சபையினர் கூறியுள்ளனர்.

இந்த ஆலயத்தை இலங்கை இராணுவத்திடம் இருந்து மீட்டுத் தருமாறு பலதடவை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் ஆலய தர்மகத்தா சபையினர் கூறியுள்ளனர்.

குறித்து பிரதேசத்தில் இருந்து இடம்பெயந்த மக்களை மீளக் குடியமர்த்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆலய தர்மகத்தா சபையினர் கூறுகின்றனர்.