தமிழர் தாயகமான

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றத்தைக் கண்டித்துப் பேரணி- மகாவலி நீர் தேவையில்லையெக் கூறி மக்கள் கோஷம்

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிாிவினர் படம் எடுத்ததாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 28 15:20
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 29 00:25
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு- கிழக்குத் தமிழர் தாயக நிலத்தை பிரிக்கும் நோக்கில் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியும் கண்டனக் கூட்டமும் நடைபெற்றது. மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்டப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டித்து இடம்பெற்ற பேரணியில் பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர். மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தையர்கள் மற்றும் சமயக் குருமார், தமிழ் அரசியல் பிரதிநிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பேரணி இடம்பெற்ற முல்லைத்தீவு நகரில் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை இராணுவமும் குவிக்கபட்டிருந்தன.
 
வடக்கு- கிழக்கு தமிழர் தாயக சிவில் சமூகப் பிரதிநிதிகள். யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளும் பேரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

பேரணியில் கலந்துகொண்ட பலரை இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் செய்தியாளர்கள் போன்று செயற்பட்டு படம் எடுத்ததாகவும் பேரணியில் கலந்து கொண்ட சிவில் சமூகப் பிரதிநிதி ஒருவர் கூர்மைச் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இந்தப் பேரணியில் கலந்துகொள்வதற்காக வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெரும்திரளான மக்கள் பேரூந்துகளில் முல்லைத்தீவுக்கு இன்று காலை சென்றிருந்தனர்.

கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருனாட்டுக்கேணி ஆகிய இடங்களில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் சிங்களக் குடும்பங்கள் தங்கியுள்ளன.

அவ்வாறு தங்கியுள்ள குடும்பங்களுக்கு கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை காணி அனுமதிப் பத்திரங்கைள வழங்கியுள்ளது.

இதனைக் கண்டித்தே ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை, தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் சிதைக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், தமிழர் நிலங்களில் பலாத்காரமாகத் தங்கியுள்ள தென்னிலங்கை சிங்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் இரத்துச் செய்ய வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

முல்லைதீவு செயலகத்தில் மகஜர் ஒன்றைக் கையளித்த ஆர்ப்பாட்டக்காராகள், அங்கிருந்து பேரணியாக முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு கண்டனக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருவதாக மக்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.