இலங்கையில்

பௌத்த குருமாரை விசாரனை செய்ய விசேட நீ்திமன்றம்- ராமாஞ்ஞ மகா பீடம் இலங்கை ஜனாதிபதிடம் கோரிக்கை

கொழும்பில் பேரணியாகச் சென்று மகஜர்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 28 23:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 29 16:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் பௌத்த குருமார் சம்மந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி ராமாஞ்ஞ மகா பீடத்தினால் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் மகஜர் கையளிகப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றதால் அங்கீரிக்கப்பட்ட சட்ட மூலம் ஒன்றின் ஊடகவே பொளத்த குருமாரை விசாரிப்பதற்கான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் ராமாஞ்ஞ மகா பீடம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சுமார் இருநாறுக்கும் அதிகமான பௌத்த பிக்குமாரின் பேரணி, கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது. அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த கோமல்பேர சோபித தேரர் தலைமையிலான குழுவினர் மகஜரை நேரடியாகவே கையளித்தனர்.
 
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தப் பேரணியை ராமாஞ்ஞ மகா பீடம் ஏற்பாடு செய்திருந்தது. சிங்கள பௌத்த மக்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

1958 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் பௌத்த குருமாரே காரணம்-- விக்கிரமபாகு கருணாரட்ன.

பொதுபல சேனவின் செயலாளர் அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முறை தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவிடம் விசனமும் தெரிவிக்கப்பட்டது.

பௌத்த குருமார் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களைப் பொலிஸார் கைது செய்வதற்கு சில விதிமுறைகள் கையாளப்பட வேண்டும் என்றும் பௌத்த குருமார் மீதான குற்றங்களை முதலில் பௌத்த குருமார் அடங்கிய குழுவினர் விசாரனை செய்த பின்னரே விசேட நீதமன்றத்திற்கு பாரப்படுத்த முடியும் எனவும் இலங்கை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழர் தாயகத்தில் போர் நடைபெற்றகாலத்தில் ராமாஞ்ஞ மகா பீடம் உள்ளிட்ட பௌத்த அமைப்புகள் இலங்கை அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான காலத்தில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இதுவரை 131 பௌத்த விகாரைகள் பௌத்த குருமாரினால் இலங்கை இராணுவத்தின் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஏலவே கூறியிருந்தார்.

வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை மையப்படுத்தி ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என இலங்கை அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கடந்த மே மாதம் இடம்பெற்ற, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் நினைவுதின நிகழ்வில் உரையாற்றும்போது கூறியிருந்தார்.

இந்த நிலையில் பௌத்தகுருமாரை விசாரணை செய்வதற்கென தனியார் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய சமூகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பிலும் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்புக்கான வரைபிலும் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

1958 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் பௌத்த குருமாரே காரணம் என இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.