தமிழர் தாயகம்

கிளிநொச்சியில் காயங்களுடன் இளம் பெணிண் சடலம்- சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் இடுப்புப் பட்டியும் மீட்பு

உயிரிழந்தவர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 29 15:46
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 00:07
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் கிளிநொச்சி- கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி பிரவுண் வீதியில் சுமார் 30 வயது என கருதப்படும் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரவுண் வீதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்தே இன்று புதன்கிழமை காலை சடலம் மீட்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். வயலுக்குப் பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் இளம் பெண் ஒருவர் உள்ளாடையுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு, இலங்கைப் பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற இலங்கைப் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர். சடலமாகவிருந்த இளம் பெண்ணுடைய முகத்தில் காயங்கள் உள்ளன. பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என இலங்கைப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
 
இளம் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி, குற்றத் தடயவியல் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில்ச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அதேவேளை, இளம் பெண்ணின் சடலத்திற்கு அருகில் இருந்து இலங்கையின் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் சீருடை, இடுப்பு பட்டி மற்றும் பேனை ஆகிய தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை பிந்திக் கிடைத்த தகவலின்படி கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறிகண்டியைச் சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று மாலை வரை இந்த இளம் பெண் அடையாளம் காணப்படாத நிலையில் ஊடகவியலாளர் ஒருவரின் உதவியுடன் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுாிபவர் என்றும் ஒரு பிள்ளையின் தாய் எனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை,களுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மருத்துவப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இலங்கைப் பொலிஸார் கூறினார்

இந்த மரணம் தொடர்பாக மேலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதுவரை எவரும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படவில்லை.

ஏலவே இடம்பெற்ற பெண்கள் பலரின் கொலைகள், இலங்கைப் படையினரால் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டு செய்யப்பட்ட கொலைகள் தொடர்பாக இலங்கைப் பொலிஸார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.