யாழ்ப்பாணம்

வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான ஏழு கட்டடங்கள் இலங்கைப் படையின் கட்டுப்பாட்டில்- தவிசாளர் முறைப்பாடு

மைத்திரி- ரணில் அரசாங்கம் கவனம் எடுக்கவில்லையெனக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 செப். 03 15:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 03 22:12
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான ஏழு கட்டடங்கள் இலங்கைப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் அரச கட்டங்கள் பலவற்றை இலங்கை இராணும் பயன்படுத்துவதாகவும் அவற்றை பொதுமக்களிடமும் வலி வடக்கு பிரதேச சபையிடமும் கையளிக்க வேண்டும் என சுகிர்த்ன் வலியுறுத்தயுள்ளார். வலி வடக்கு பிரதேச சபையின் தலைமைக் கட்டடம் இதுவரை கையளிக்கப்படவில்லை. சபையின் காங்கேசன்துறை அலுவலகத்திற்குரிய நூல் நிலையம், சிறுவர் பூங்கா, வாடிவீடு ஆகியவற்றில் இலங்கைப் படையினர் தங்கியுள்ளனர். அத்துடன் குரும்பசிட்டி, வசாவிளான், காங்கேசன்துறை ஆகிய மூன்று மைதானங்களும் இலங்கைப் படையினரின் பாவனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இவற்றை கையளிக்குமாறு மைத்திரி- ரணில் அரசாங்கத்திடம் பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சார சபை அலுவலக வளாகமும் இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் திடீர் பழுதுகள் ஏற்பட்டாலும் மின்சார சபை ஊழியர்கள் 18 கிலோ மீற்றர் தூரம் பயணித்தே, தமது சேவையை வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வலி.வடக்குப சபைக்குரிய கட்டடம் இலங்கைப் படையின் பாவனையில் உள்ளதால், சபையின் கூட்டங்களுக்காக வேறு கட்டங்களை பெருந்தொகை பணத்தைச் செலுத்தி வாடகைக்குப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வலி- வடக்கில் இலங்கைப் படையினரின் பயன்பாட்டில் உள்ள காணிகளில் சுமாா் அறுநுாற்றி என்பது ஏக்கர் காணிகள் கடந்த ஏப்ரல் மாதம் கையளிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நடவடிக்கைகள் பின்னா் கைவிடப்பட்டுள்ளன. இதுவரை அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இலங்கை முப்படையினரை உள்ளடக்கிய இலங்கை ஜனாதிபதி தலைமையிலான செயலணிக் குழவிலேயே, தமிழர் தாயகக் காணிகளை காணிகளை மீளப் பெறுவது பற்றிய அனுமதியை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறைகூறியுள்ளார்.

வடமாகாண உள்ள உள்ளூராட்சி சபைகள் பலவற்றின் கட்டங்கள் மற்றும் விவசாயக் காணிகள் பேன்றவற்றை இலங்கைப் படையினர் இன்னமும் தமது பயன்பாட்டில் வைத்துள்ளதாக வலி.மேற்குப் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் ஏலவே கூறியிருந்தமை குறிப்பிடத்தப்பது.