2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த

மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் சிங்களக் குடியேற்றங்கள்- கொழும்பு நிர்வாகத்தின் கீழ் திட்டங்கள்

அமைச்சர் ராஜித சேனரட்னவின் கருத்தை மறுத்து ரவிகரன் விளக்கம்
பதிப்பு: 2018 செப். 04 10:23
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 04 11:26
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நல்லாட்சி என தம்மைத்தாமே கூறிக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேதான் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் மிக மிக வேகமாகத் தீவிரமடைந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் முல்லைத்தீவு. வவுனியா மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த ரவிகரன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்தான் மைத்திரிபால சிறிசேன என்றும் குறிப்பிட்டார்.
 
இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களுக்குச் சொந்தாமான காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இலங்கை அமைச்சர்கள் முன்னிலையில் ஏலவே கூறியிருந்தார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்கள குடும்பங்களைக் குடியேற்ற வேண்டும் என்ற எண்ணக்கரு 1941 ஆம் ஆண்டு தோன்றியது எனவும் அந்தக் கருத்தை 1983இல் ஜே.ஆர் ஜயவர்த்தன இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் மூலமாக நடைமுறைப்படுத்தினார் என்றும் வரலாறுகள் உண்டு.

குறிப்பாக, 1941 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தி திட்டம், முதலாவது சிங்களக் குடியேற்றமாகும். 1949 ஆரம்பிக்கப்பட்ட அல்லைத்திட்டம், 1950 இல் உருவாக்கப்பட்ட கந்தளாய் திட்டம், 1954இல் பதவியாத்திட்டம்.

மற்றும் முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொறவேவாத்திட்டம், பெரியவிளாங்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1979 ஆம் ஆண்டு கொண்டவரப்பட்ட மகாதிவூல்வௌ திட்டம் என்ற சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும், கிழக்கு மாகாணத்தில், பிரதேசங்களை தூண்டு துண்டாக உடைக்கும் நோக்கம் கொண்டவை.

இந்த நிலையில் அமைச்சர் ராஜதை சேனரட்ன கூறிய கருத்தை நிராகரித்துத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து ரவிகரன் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேதான் முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி பெருநிலப்பரப்பில் பாரியளவிலான சிங்கள குடியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஹிபுல் ஓயா திட்டம் கொண்டுவரப்பட்டது.

முல்லைத்தீவு வெள்ளக்கல்லடி, சிவந்தாமுறிப்பு ஆகிய பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியேற முயற்சித்தனர். ஆனால் தமிழ் மக்கள் ஒன்றுசேர்ந்து எதிர்ப்பை வெளியிட்டதால் குடியேற வந்த சிங்களக் குடும்பங்கள் திரும்பிச் சென்று விட்டன.

காணிகளை அபகரிப்பதற்கு இலங்கை வனவள திணைக்களம், இலங்கைத் தொல்லியல் திணைக்களம், இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் என சிங்கள அதிகாரிகளைக் கொண்ட திணைக்களங்கள் மூலமாகவும் கொழும்பை மையப்படுத்திய மகாவலி அதிகாரசபை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதற்கு இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்பும் பெறப்படுகின்றது. மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமாவே இந்தத் திணைக்களங்கள் இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சுமார் நான்காயிரத்தி ஐநூறு ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளீதரன் இலங்கை நாடாளுமன்ற நிதிக்குழுக் கூட்டத்தில் கூறினார்.

வவுனியா மாவட்டத்தின் வடக்கு எல்லைக்கிராமங்களான காஞ்சூர மோட்டை, காட்டுப் பூவரசங்குளம், நாவலர் பாம் ஆகிய பூர்வீக நிலங்களில் தமிழ் மக்கள் மீளக் குடியேறுவதற்கு இலங்கை வன இலாகா அதிகாரிகள் தொடர்ச்சியாக தடையேற்படுத்தி வருவதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.

இதேவேளை. தமிழர் பிரதேசங்களில் வேமாக இடம்பெற்று வரும் காணி அபகிரிப்புகளைத் தடுக்க வடமாகாண சபை விசேட குழு ஒன்றை கடந்த யூன் மாதம் உருவாக்கியிருந்தது.

இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோhரி முல்லைத்தீவில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றது.

இலங்கை மகாவலி அதிகாரசபை, இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.